பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார்; கன்னியாகுமாரியில் தங்குவார் எனத் தகவல்

அரசியல் இந்தியா சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 30,31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை அதாவது மே மாதம் 30ம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அன்று பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார்.மேலும், ஜூன் மாதம் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவுப் பாறை விட்டு வெளியே வந்து, பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *