உத்திரபிரதேச முதல்வர் யோகி, ரஜினியுடன் ஜெயிலர் படத்தை பார்க்கவுள்ளார்

அரசியல் இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை பார்க்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்thaது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்தது. தமிழ் திரையுலகில் இது ஒரு புதிய சாதனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இமயமலை சென்ற நடிகர் ரஜ்னிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக லக்னோ விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்திடம், “நாளை முதல்வர் யோகி ஆதியநாத்துடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படம் பார்க்க இருக்கிறேன்” எனத் தெரிவித்தார். மேலும், படத்துக்கான வரவேற்பு குறித்து கேட்டதற்கு, “எல்லாம் இறைவன் அருள்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *