சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரின் உயரத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 5-ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிலவை சுற்றி வருவதற்கான தூரம் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வந்தன.
இதையடுத்து, நேற்று சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. லேண்டர், நிலவை ஆய்வு செய்யும் பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனத்தை சுமந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மதியம் 3.50 மணி அளவில் லேண்டரின் உயரம் டீ பூஸ்டிங் முறையில் நிலவுக்கு நெருக்கமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 113 கி.மீ முதல் 157 கி.மீ சுற்றுவட்டப்பாதை உயரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, லேண்டர் படம்பிடித்த தென் துருவ பகுதியின் புதிய படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.