உங்களின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு, நாளை மாநாட்டுக்கு வாருங்கள். நீங்கள் இதை மனதில் வைத்து வர வேண்டும் உங்கள் நலம் தான் முதலில் முக்கியம் என்றும், நாளை நமது மாநாட்டில் சந்திப்போம், அங்கு மாபெரும் அரசியல் நிகழ்வுகளை நிகழ்த்துவோம்” என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு, விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “உங்கள் நலத்தை கருத்தில் கொண்டு அடிப்படையில் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.” எல்லா வகைகளிலும் உங்கள் பாதுகாப்பு, எனக்கு முக்கியமானது , மாநாட்டுப் பயணத்தின் போது நீங்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது. பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துங்கள். மேலும், நீங்கள் வருகிற வழிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் செல்ல வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதோடு, மாநாட்டுக்கான தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு படையுடன் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநாட்டின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு காவல்துறையுடன் முழுமையாக ஒத்துழைக்கவும் வேண்டும். உங்கள் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு, மாநாட்டுக்கு வாருங்கள். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அழைப்பு மற்றும் அறிவுரைகளை x தளத்தின் மூலம் கூறி மாநாட்டிற்கு அழைத்துள்ளார்.