பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வில் 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிந்த பிறகு, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு இந்த முடிவுகளை வெளியிட்டார்.மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளங்களில், தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பெறலாம். மேலும், தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும், மாணவர்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம்.
பொதுத்தேர்வு முடிவுகள் பற்றிய கூடுதல் தகவல்:


பொதுத்தேர்வு முடிவுகள் பற்றிய கூடுதல் விவரம