இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மூன்று மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை இந்திய விமானப்படையின் எஸ் 400 சுதர்சன் சக்ரா வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு தடுத்துள்ளது. எஸ் 400 வான் தர்சன் சக்ரா மூலம் 384 ஏவுகணைகளை வானில் இடைமறித்து அழிக்க முடியும். எஸ் 400 சுதர்சன் சக்ரா 100 அடி முதல் 40,000 அடி உயரத்தில் பறந்து எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனை கொண்டது. இந்த ஏவுகணை அமைப்பின் ரேடார் மிகவும் மேம்பட்ட மற்றும் சக்திவாய்ந்தது; இது 600 கிமீ வரம்பிற்குள் 300 இலக்குகளை கண்காணிக்க முடியும். இந்த எஸ் 400 வகை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்தியா பாகிஸ்தானின் ஏவுகணைகளை தடுத்துள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே மூன்று எஸ் 400 அமைப்புகள் உள்ளன, மேலும் இரண்டு கூட ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட உள்ளன என கூறப்படுகிறது.

