டெல்லியில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட பின் கோவை திரும்பிய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவை ஈஷா மையத்தில் கடந்த 8 ஆம் தேதி நடந்த மகா சிவராத்திரியிலும் அந்த வலியுடனே சத்குரு பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. வலி தீவிரமடைந்ததால் கடந்த 15 ஆம் தேதி எம்ஆர்ஐ பரிசோதனை செய்ததாகவும், அப்போது ஜக்கி வாசுதேவின் மூளையில் ரத்தக்கசிவு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு கடந்த 17ம் தேதி தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின் முதன் முறையாக கோவைக்கு விமானத்தின் மூலம் வந்த சத்குருவிற்கு விமான நிலையத்தில் அவரது சீடர்கள் சிலர் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.
உதிரி மலர்கள், பூங்கொத்துகள், விளக்குகள் ஆகியவற்றை கையில் ஏந்தியபடி நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள், பாடல்பாடி வரவேற்றனர்.

