இந்தியர்களுக்கு ஜூன் 2ஆம் வாரம் வரை விசா வழங்க சவுதிஅரேபியா திடீர் தடை .

அரசியல் அரபு நாடுகள் இந்தியா உலகம் சிறப்பு சுற்றுலா செய்திகள்

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை சவூதி அரேபியா அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஹஜ் யாத்திரை முடிவடையும் வரை, 14 நாடுகளுக்கு உம்ரா, வணிக மற்றும் குடும்ப விசா போன்றவை இடைநிறுத்தப்பட்டுள்ளன. வரும் 13ஆம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் போன்ற நாடுகளுக்கு உம்ரா பயணம் உள்ளிட்ட சில விசாக்கள் வழங்கப்படும். அதன்பிறகு, ஹஜ் தவிர்ந்த அனைத்து வகை விசாக்களும் நிறுத்தப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் 1000க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல் மற்றும் வெப்பம் போன்ற காரணங்களால் உயிரிழந்தனர். அவர்களில் பலர் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் என தெரியவந்தது. இதனால், சவுதி அரசு இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *