2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மாநாடு முதன்மை செய்தி

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என கூறியுள்ளார். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். கூட்டணி அமைக்காததால் எங்கள் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்து விட மாட்டார்கள். இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாதக. தோல்வி என்பது தோல்வியல்ல, பயிற்சி. எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கான விவசாயி சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது. எனது எண்ணம் மட்டும் இந்த சின்னம் அல்ல, அது எனது அடையாளமாகும். 2026-ம் ஆண்டு தேர்தலில் 117 இடங்கள் பெண்களுக்காகவும், 117 இடங்கள் ஆண்களுக்காகவும் ஒதுக்கப்படும், மேலும் 134 இடங்கள் இளைஞர்களுக்காக வழங்கப்படும். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *