எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

அரசியல் இந்தியா இலங்கை உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 4 நாட்டுபடகுகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விடுவர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவர். இது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
இந்த சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த 32 மீனவர்கள் 4 நாட்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் 32 மீனவர்களை கச்சத் தீவு அருகே கைது செய்தனர். அவர்களின் 4 நாட்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 32 மீனவர்களையும் இலங்கை கடற்படை கற்பிட்டி கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதன்பிறகு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று அல்லது நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *