ஆங்கில புத்தாண்டு (2023) இன்று பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய காலண்டரில் ஜூலை, ஆகஸ்ட் நீங்கலாக மீதம் உள்ள பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது.
ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1ம், இறுதி நாளாக ஏப்., 31ம் இருந்தது. கி.மு.45ல் ரோமானிய ‘ஜூலியன் காலண்டர்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் இடம்பெற்றன. ஜன., 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஐரோப்பாவின் சில நாடுகளில் டிச. 25, மார்ச் 1, மார்ச் 25 என பல தேதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டது.
பின், ‘ஜூலியன் காலண்டரில்’ உள்ள, ‘லீப் இயர்’ கணக்கீடுகளை சரி ரோமை சேர்ந்த போப் கிரிகோரி. 1582ல், ‘கிரிகோரியன் காலண்டரை’ அறிமுகப்படுத்தினார். இதில், ஜூலை, ஆகஸ்ட் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள், ஒரு ஆண்டாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜன., 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டன. 1752 வரை, பிரிட்டிஷ் ராஜியம் இக்காலண்டரை ஏற்றுக் கொள்ளவில்லை. சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும், ‘கிரிகோரியன் காலண்டரை’ அடிப்படையாகக் கொண்டு ஜன.1ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றன.