ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல் – பாதுகாப்பு அதிகரிப்பு

அரசியல் ஆப்கானிஸ்தான் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி இன்று உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார். அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்பு படையினர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *