ஜெயிலர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஜெயிலர் டிரெய்லரில் மனைவி, மகன், மகள், பேரன் அமைதியான குடும்பத்தலைவராக இருக்கிறார் . அவரது மகன் வசந்த் ரவி காவல்துறை அதிகாரி.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஆரம்பத்தில் மன ரீதியான பிரச்னை காரணமாக மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெறுவார். அதே போல இந்தப் படத்திலும் ரஜினிகாந்த், மன நல மருத்துவரான விடிவி கணேஷிடம் சிகிச்சை பெறுகிறார்.
அப்போது விடிவி கணேஷ் இந்த நோய் வந்தவர்கள் பூனைக்குட்டி மாதிரியே இருப்பாங்க திடீரென புயலாக மாறிடுவாங்க என்பார்.
ஒரு ஷாட்டில் போலீஸ் உடையில் ரஜினி தயாராகிறார். அவர் ஜெயிலராக மாறும் காட்சியாக இருக்கலாம்,அல்லது பிளாஸ்பேக் போர்ஷனாக இருக்கலாம்.
டிரெய்லரின் துவக்கத்திலேயே பாலைவன பின்னணியில் துப்பாக்கி சூடு நடக்கிறது. பீஸ்ட் போல இந்தப் படமும் தீவிரவாத பின்னணியில் நடப்பது உறுதியாகிறது. விக்ரம் போல இந்தப் படத்திலும் ஏஜெண்ட்டாக இருக்கலாம். பொறுமையான குடும்பத்தலைவராக இருக்கும் ரஜினி தனக்கான வேலை வந்ததும் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற புலியாக மாறுகிறார்.
வழக்கம்போல வில்லன் ஜாக்கி ஷெராஃப் நீ பார்க்குறது போலீஸ் காரணோட அப்பன, நீ பார்க்காதத நான் பார்த்திருக்கிறேன் என ஹீரோ ரஜினிக்கு பில்டப் கொடுக்கிறார். இதனால் இருவருக்குமான பிளாஸ்பேக் காட்கிள் படத்தில் இருக்கலாம்.
கத்தி, துப்பாக்கி என உள்ளூர் வில்லன் முதல் உலகளாவிய வில்லன் வரை ரஜினிகாந்த் பொளந்துகட்டுகிறார். ஒரு காட்சியில் வில்லன்கள் சூழ நடந்துவருகிறார். அந்த காட்சியில் அவருடன் வருபவர்கள் டர்பன் அணிந்திருக்கிறார்கள். இதனால் வட இந்தியாவில் நடக்கும் கதையாக இருக்கக்கூடும்.
