பிரதமர் மோடியின் 45 மணிநேர தியானம் நிறைவுபெற்றது; திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மே 30-ஆம் தேதி அன்று தனது தியானத்தை தொடங்கினார்.
இந்நிலையில் இன்று, சூரிய உதயத்தின்போது, ”சூரிய அர்க்யா” செய்த பின்னர் பிரதமர் மோடி தனது மூன்றாவது நாள் தியானத்தை இன்று (ஜூன் 1) காலையில் தொடங்கிய நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் முடித்துக் கொண்டார். இறுதியாக பிரதமர் மோடி 45 மணி நேரமாக மேற்கொண்ட தியானம் நிறைவடைந்தது. பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மோடி படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு திருவள்ளுவர் சிலையில் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று மாலை 6 மணி உடன் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில் , பிரதமர் மோடி டெல்லி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *