2026ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணை வெளியானது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிப்.7ம் தேதி மும்பையில் தொடங்கும் முதல் போட்டியில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. பிப்.15ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்த நிலையில் இலங்கையின் கொழும்புவில் போட்டி நடைபெற உள்ளது.
இரு நாட்டுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருப்பதன் காரணமாக பாகிஸ்தான் அணி தங்களுடைய போட்டிகள் அனைத்தையும் கொழும்பு நகரில் விளையாட உள்ளது. இதில் இந்தியா, சென்னையில் ஒரு போட்டியில் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்று இந்தியாவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இந்தியா விளையாடும் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அவர்கள் கொழும்புவில் மோதுவார்கள். ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மும்பையில் தான் நடக்கும்.
இந்த தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் மார்ச் 8ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை போல் இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம்பெறுவார்கள். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளாக விளையாடுவார்கள். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதியில் மோதுவார்கள்.

