உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டிருந்த சூர்யகாந்த் அதிகாரப்பூர்வமாக புதிய பொறுப்பில் ஏற்றார். அவர் அடுத்த 15 மாதங்கள் இந்த பொறுப்பில் செயல்படுவார். வரும் 2026 பிப்ரவரி 9ஆம் தேதி 65 வயதை எட்டுவதால், அன்றே அவர் பதவியில் இருந்து விலக உள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட அரசியல் மற்றும் நீதித்துறை தலைவர்கள் கலந்து கொண்டு சூர்யகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

