முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஆதரவற்ற விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ரூ.1,000 -ல் இருந்து ரூ. 1,200 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ‘அமைச்சரவைக் கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகை 1000 ரூபாயில் இருந்து, 1200ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.