விஜய்யின் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன்னர் அஜித்தின் ‘துணிவு’ படத்துக்காக அதிகாலைக் காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்காமல் இ்ருந்தது. ‘வாத்தி’, ‘மாவீரன்’, ‘ஜெயிலர்’ என முன்னணி நட்சத்திரங்களின் எந்தப் படங்களின் சிறப்பு காட்சிகளும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், விஜய்யின் ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் சார்பில், ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு ‘லியோ’ படத்தை 19-ம் தேதி வெளியிட உள்ளதாகவும் அதற்காக 19-ம் தேதி மட்டும் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.
