சி.ஏ.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சி.ஏ.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட சி.ஏ.பி.எஃப் கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், மத்திய ஆயுத காவல் படைகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தியை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் எனவும், இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.