வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவிப்பு; இறப்பவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு

இந்தியா இயற்கை பேரிடர் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கத்திரி வெயில் காலத்தில் , வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்து சில நேரங்களில் மரணங்களும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு, மாநில பேரிடர் நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகளுக்கும், ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கவும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu notifies heatwaves as ‘state disaster’, Rs 4 lakh ex-gratia for deceased

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *