குஜராத்தின் வதோதரா நகரில் இன்று (அக். 28) ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஆலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இணைந்து கலந்து கொண்டனர். C-295 விமானங்கள் ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களை கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட, விமானத்தில் இருந்து குண்டுகளை வீச, மற்றும் விஐபி பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்பாடுகளை கொண்டுள்ளன. இவை அனைத்தையும் உள்நாட்டில் முழுமையாக தயாரிக்க டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனம் முதன்முதலில் குஜராத்தில் இந்த தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்த தொழிற்சாலை உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ்-ம் இணைந்து இந்நிறுவனத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்காக வதோதராவில் TATA-Airbus விமான அசெம்பிளி வசதி திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வளாகத்தில் TATA Advanced Systems Limited நிறுவனம் C-295 விமானங்களை தயாரிக்கவுள்ளது, இது புதிய இந்தியாவின் பணி கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. நாட்டின் சிறந்த மகனாக விளங்கிய ரத்தன் டாடாவை சமீபத்தில் இழந்தோம்; அவர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், மகிழ்ச்சியுடன் இருந்திருப்பார். அவரது ஆன்மா எங்கிருந்தாலும், அவருக்கு மகிழ்ச்சியைத் தரும். நான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, ரயில் பெட்டிகளை உருவாக்க வதோதராவில் ஒரு தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது, இது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான அடித்தளமாக அமைந்தது.இன்று இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பு புதிய உயரங்களை அடைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருந்தால், இன்றைய நிலையை அடைவது சாத்தியமில்லை. அந்த காலத்தில், இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தி இருக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. ஆனால், நாங்கள் புதிய பாதையில் முன்னேற முடிவு செய்தோம் மற்றும் நமக்கென்று ஒரு புதிய இலக்கை நிர்ணயித்தோம். இன்று, அதன் விளைவுகள் நம் முன்னிலையில் உள்ளன என்று அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “இன்று, நாங்கள் ஒரு அதிநவீன தொழில்துறை வசதியை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளோம். இதற்கிடையில், இரண்டு நிறுவனங்களுக்கிடையில் ஒரு அசாதாரண திட்டம் எவ்வாறு யதார்த்தமாகிறது என்பதையும் இன்று நாம் காண்கிறோம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .