வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழுவு மண்டம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிசம்பர் 3) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும். இதனால் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர் முதல் கடலூர் உள்ள கடலோர மாவட்டங்கள், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், டெல்டா பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும். வரும் 5 ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும், மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம். எனவே டார்ச் லைட்,
பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

