திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் விழா.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கலை / கலாச்சாரம் கோயில்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் ஆழித்தேர் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகள் நடத்துவதாக நம்பப்படுகிறது. திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவின் மிகப்பெரிய தேர் எனும் பெருமையை பெற்றது. ஆழித்தேர் அலங்கரிக்கப்பட்ட பகுதிகளுடன் 48 அடி உயரமும் விமானம் 12 அடி மற்றும் தேர் கலசம் 6 அடி உயரமும் கொண்டது, இதனால் மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர் 220 டன் எடை கொண்டது, மேலும் 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், சுமார் 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளமுடைய நான்கு வடங்கள் தேரில் இணைக்கப்படுகின்றன மேலும், 500 கிலோ எடையுள்ள அலங்கார துணி ஆகியவற்றால் ஆழித்தேர் அலங்கரிக்கப்படுகிறது.தேரின் முன்னால் அமைக்கப்படும் நான்கு குதிரைகள், யாழி பொம்மைகள் மற்றும் தேரின் நான்கு புறங்களில் அமைக்கப்படும் அலங்கார தட்டிகள் ஆகியவற்றின் மொத்த எடை 5 டன் ஆகும். மொத்தமாக அலங்கரிக்கப்பட்ட தேரின் முழு எடை 350 டன் ஆகும். தேரை நகர்த்துவதற்காக தேரில் ஹைட்ராலிக் ப்ரேக் அமைக்கப்பட்டுள்ளது மேலும் தேரை திருப்ப பொக்லின் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று ஏப்ரல் 7ம்தேதி ஆழித்தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, அஜபா நடனத்துடன் தியாகராஜர், கோவிலில் இருந்து தேரில் எழுந்தருளினார், இன்று காலை 5:30 மணியளவில் ஆழித்தேருடன், கமலாம்பாள் ,விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர்கள் வலம் வர பக்தர்கள் ஆருரா தியாகராசா என முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.பிரமாண்ட ஆழித்தேரை பக்தர்கள் கண்டு ரசித்து, செல்போன் மூலம் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தேரோட்டத்தை காண வெளி மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் பொதுமக்கள் திருவாரூருக்கு வருகை தந்துள்ளனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *