சென்னைக்கு பெருமை சேர்க்கும் 1600 ஆண்டுகள் பழமையான கோயில்கள்; வியப்பூட்டும் தமிழகத்தின் தலைநகரம் வரலாறு

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

சென்னை மாநகரத்தின் 384 ஆவது பிறந்த நாள் நெருங்கி வருகிறது. அந்த வகையில்,கொண்டாட்ட நகரமான சென்னை 1,600 ஆண்டுகளுக்கு முன்பே ஆன்மீக நகரமாகவும் இருந்துள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கபாலி என மக்கள் உரிமையோடு அழைப்பது மயிலை கபாலீஸ்வரரை தான் . அப்பனே, தாயே என்று சிவனை பிற ஊர்களில் வணங்கும் நிலையில் தனது நண்பனை அழைப்பது போன்று உரிமையோடு சென்னை மக்கள் கபாலீஸ்வரரை கபாலி என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர். சென்னை என்றவுடன் பலரும் இது 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தோன்றிய ஒரு தொழில் நகரம் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் 1,600 ஆண்டுகள் முன்பு வரை வரலாறு கொண்ட ஒரு பழமையான நகரமாக சென்னை இருந்துள்ளது. அதற்கு உதாரணம் தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
நாம் தற்போது பார்க்கும் கபாலீஸ்வரர் கோயில் சரியாக 1,700 ஆண்டுகளுக்கு முன்பு மெரினா கடற்கரை ஒட்டிய பகுதியில் கடல் அலைகள் கோயில் சுவரை மோதிச் செல்லும் அளவிற்கு அழகாகவும் புன்னை மரங்கள் நிறைந்த மயில்கள் அதிகம் வாழ்ந்த ஒரு வனப்பகுதியாகவும் இருந்துள்ளது . சைவ குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் கிபி 7 ஆம் நூற்றாண்டில் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு ” மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான் ” என்று பாடிய திருப்பதிகத்தின் மூலமாக அப்போதைய சென்னையின் அழகு தெரியவருகின்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1,700 ஆண்டுகளுக்கு முன்பே திருவொற்றியூர் சிவன் கோயிலில் இருந்து மயிலை கபாலி கோயில் வரை கடற்கரை ஒரமாக ஒரு பெரும் பாதை இருந்ததை சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் எழுதியுள்ளார். ஆழிப்பேரலையின் பாதிப்பால் கடற்கரையோரம் இருந்த கோயில் சிதைந்து போக, 1600 களில் தற்போது இருக்க கூடிய இடத்தில் கபாலீஸ்வரர் கோயில் படிபடியாக எழுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *