ஆளுநருக்கு எதிராக சென்னை சின்னமலை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் காலதாமதம் செய்வதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாணவர் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சங்கங்களைச் சேர்ந்த 15 அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந்தர்கள் நியமனத்தில் காலதாமதம் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
