உச்ச அரசியல் ஒழுங்குடன், உலகம் முழுவதும் பாராட்டப்படும் வகையில் நமது வெற்றிக் கொள்கை திருவிழாவை கொண்டாடுவோம். மாநாட்டிற்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது கட்சியின் கொடியை உங்கள் கைகளிலும், மனங்களிலும் ஏந்தி வரவும்,” என்று தவெக தொண்டர்களுக்கான கடிதத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதற்கான தனது கடிதத்தில், “நமது கழகத்தின் முதல் மாநில மாநாடு, வெற்றிக் கொள்கை திருவிழாவுக்கான மூன்றாவது கடிதம் இது. மாநாடு நடைபெறும் தருணம் நமக்கு மிகவும் அருகில் உள்ளது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கவுள்ள தருணங்கள், நம்மிடையே உள்ள அன்பின் கனத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்க உதவும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.மாநாட்டை கொண்டாடுவதற்காக, பெரும்பான்மையுடன் அனைவரும் வரும்போது, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, பாதுகாப்பாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வரவும். உங்கள் வருகைக்காக, வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்து, இதய வாசலை திறந்து காத்திருப்பேன். வாருங்கள், மாநாட்டில் ஒன்றிணைவோம். தமிழ்நாட்டுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்த உறுதியாக முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்ற வியூகச் சாலையில் சந்திப்போம், வெற்றி நிச்சயம் என்று விஜய் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.