நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்னும் 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது.
தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகளுடன், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. 3 வண்ணங்கள் கொண்டதாகவும், கட்சியின் கொள்கைகளை உள்ளடக்கியதாகவும் கொடி அமைக்கப்படுவதாக தெரிகிறது.
கொடியை அறிமுகம் செய்தவுடன், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், கட்சிக் கொடியை ஏற்றுவதற்கான பணிகளை தொடங்க நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.