ஆசிரியர் தினம் கொண்டாட்டம் – டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்

இந்தியா செய்திகள் தமிழ்நாடு மற்றவை

இந்தியாவில் ஆசிரியர் தினம் வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினம் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திருச்சியில் பிறந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் என்றப் பெருமைக்குறியவர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறந்த கல்வியாளர், பேச்சாளர், விஞ்ஞானி, மற்றும் சிறந்த ஆசிரியராகவும் விளங்கியவர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை பெறுமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்தநாளன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவ்ரவித்தது. உலகளவில் அக்டோபர் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் பணி என்பது மிகவும் புனிதமானப் பணியாக கருதப்படுகிறது. பாடங்கள் எடுப்பது மட்டும் ஆசிரியரின் பணியல்லாமல் மாணவர்களுக்கு சிறந்தப் பண்புகளையும், ஒழுக்கத்தையும் போதிப்பதுமாகும். ஒரு நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் என்று கூறினாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது ஆசிரியர்கள் தான். நாளையத் தலைவர்கள், சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் என அனைவரையும் உருவாக்கும் மிகச் சிறந்த பொறுப்பு ஆசிரியர்கள் கரங்களில் உள்ளது என்றால் அது மிகையாகாது.
வெறும்கல்லை செதுக்கி சிற்பமாக வடிவமைக்கும் சிற்பி போல வெற்றுத்தாளாக பள்ளியில் அடி எடுத்து வைக்கும் மாணவனை முழு அறிஞனாக, சமூகத்தில் ஓர் குடிமகனாக உருவாக்குவது ஆசிரியர்கள் மட்டுமே. ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்வதும், அவர்களுக்கு இன்பஅதிர்ச்சி அளிப்பதும் மிகவும் நெகிழ்ச்சியான ஒன்று.
மாணவர்களின் வாழ்க்கைக்கு ஓர் ஏணிப்படிகளாக ஆசிரியர்கள் விளங்குவது உலகில் எங்குமே காணாத ஓர் அதிசயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *