பிரபல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா பபடக்குழுவினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது; பலர் படுகாயம் என முதற்கட்ட தகவல்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா முதல் பாகம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. செம்மரக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, ஃபகத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக சமந்தா நடனமாடிய பாடல் பெரும் ஹைலைட்டாக அமைந்தது.
இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் பட்பிபிடிப்பு விறுவிறுப்பாக உருவாகிவருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் சாய் பல்லவி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவடத்தில் உள்ள நர்கெட்பள்ளி என்ற பகுதியில் புஷ்பா 2 படக்குழுவினர் சென்ற பேருந்தும் மற்றொரு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினரில் சிலர் பலத்த காயமடைந்தனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் படப்டிப்பிடிப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.