தென் அமெரிக்காவின் தெற்கு முனை; அர்ஜென்டினாவில் உள்ள உஷுவாய் (Ushuaia) நகரம் தான் பூமியின் கடைசி நகரம்

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

பூமி உருண்டையானது. ஆனால் இந்த சுழலும் உலகத்திற்கும் ஒரு முடிவு உண்டு. உலகில் உள்ள கடைசி நகரத்தின் பெயர் என்ன தெரியுமா? எங்கே அமைந்துள்ளது? புவியியலாளர்கள் உலகம் முழுவதும் இதைப் பற்றி பல சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இறுதியாக, வல்லுநர்கள் உலகின் கடைசி பகுதியை கண்டுபிடித்துள்ளனர்.
தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் அமைந்துள்ள அர்ஜென்டினாவில் உள்ள உஷுவாய் (Ushuaia) நகரம் தான் பூமியின் கடைசி நகரம் என்று அழைக்கப்படுகிறது.
உஷுவாய் கரடுமுரடான மலைகள் மற்றும் கரடுமுரடான கடல்களால் சூழப்பட்டுள்ளது., 1873 முதல், அர்ஜென்டினா அரசு அந்நாட்டின் அரசியல் கைதிகளை இங்கு நாடு கடத்தத் தொடங்கியது. இருப்பினும், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த நடைமுறை 1947 இல் நிறுத்தப்பட்டது. பழைய சிறை இப்போது வரலாற்று அருங்காட்சியகமாக உள்ளது.
ஆண்டிஸ் மலைகளுக்கு நடுவில் உள்ள இந்தப் பகுதி நெருப்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது. வடக்கே மாகெல்லன் ஜலசந்தியும் தெற்கே பீகிள் கால்வாயும் இரண்டு பெருங்கடல்களையும் இணைக்கின்றன. உஷஜுவாய் ஒரு சிறிய நகரம். தற்போது மக்கள் தொகை 57 ஆயிரமாக உள்ளது. பரப்பளவு 23 சதுர கி.மீ. கோடையில் கூட, வெப்பநிலை சில நேரங்களில் 12 டிகிரி செல்சியஸாகவும், சில நேரங்களில் 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். தென் துருவத்திற்கு செல்லும் அனைத்து கப்பல்களும் இங்கிருந்து புறப்படும். உஷுவாய் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு யாகலேஸ் பழங்குடியினர் இங்கு வாழ்ந்தனர். உஷுவாயின் முதல் கட்டிடமான சலுசியான் தேவாலயம் இன்றும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *