திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக ஜம்முவில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ஏழுமலையான் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜம்முவில் உள்ள மஞ்சின் பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஏழுமலையான் கோவில் ஒன்றை காட்டியுள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக பூர்வாங்க பூஜைகள், யாகசாலை பூஜைகள், கலச பிரதிஷ்டை ஆகியவை உள்ளிட்ட வைதீக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று காலை 7:30 மணி முதல் 8:15 மணி வரை மிதுன லக்னத்தில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திர கோஷத்துடன் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது தேவஸ்தான தலைமை அர்ச்சகர் கோவில் கோபுர கலசம் மீது புனித நீரை தெளித்து கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.
தொடர்ந்து காலை 9. 30 மணி முதல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கோவில் ஆந்திராவுக்கு வெளியே தேவஸ்தானம் கட்டியுள்ள ஆறாவது ஏழுமலையான் கோவில் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *