2024 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மை பலத்தை பாஜக கூட்டணி பெற்றதால், அந்த கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், மக்களுக்கும் இடையே கூட்டணி அமையும்; வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவை தோற்கடிக்க நினைப்பவர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்’ என்றார். வரும் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளதால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் திரிணாமுல் காங்கிரசின் திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.