டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி.

அமெரிக்கா இயற்கை பேரிடர் இயற்க்கை உலகம் சிறப்பு செய்திகள் மெக்சிகோ

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோ எல்லை பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயலால் மழை வெள்ளத்தில் பல நூறு மக்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் 31 செ.மீ. மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியில் 640 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில இடங்களில் 53 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் பல வீடுகள் மற்றும் வாழ்விடங்கள் மூழ்கியதால், நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *