பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வனவிலங்குகள் விவசாயம்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.
1972 முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து 1982 முதல் 1988 வரை சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவராக பதவி வகித்துள்ளார்.
பத்மபூஷண், எஸ்.எஸ்.பர்நாகர் உள்ளிட்ட விருதுகளையும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார். மேலும் இந்தியா மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.