புதிய கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு பணத்தை நேரடியாக அளிக்கும் முறையை எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஏற்கனவே அறிவித்திருந்தது.
விளம்பரத்தில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை கிரியேட்டர்களுக்கு அளிக்கும் புதிய திட்டத்தை எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து, அதில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அவ்வாறு அண்மையில் ட்விட்டருக்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்து அதன் லோகோவையும் மாற்றினார் மஸ்க்.
புதிய கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு பணத்தை நேரடியாக அளிக்கும் முறையை எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனிடையே வீடியோக்களுக்கு நடுவே வரும் விளம்பரத்தை மக்கள் பார்க்கும்போது கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கும் பகிரும் வசதியை நேற்று அறிவித்துள்ளது.
விளம்பர வருவாய் பகிரும் திட்டத்தில் பணம் பெற வேண்டுமானால் ஒருவரின் கணக்கு verify செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கடந்த 3 மாதங்களில் ஒன்றரை கோடி இம்ப்ரஷன்களை கொண்டிருக்க வேண்டும் என்று எக்ஸ் அறிவித்துள்ளது.
மேலும், குறைந்தபட்சம் 500 பாலோவர்களாவது இருக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
