இமயமலைப் பகுதியில் புதிய வகை பாம்பு இனத்தை ஹாலிவுட் நடிகர் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலரான லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய்’ (Anguiculus dicaprioi) என அழைக்கப்படும் இந்த புதிய பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவியுள்ளது. இதற்குப் பிறகு, ‘ஆங்கிகுலஸ் ராப்பி’ (Anguiculus rappii) என்ற பாம்பு இனம் சிக்கிம், பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் காணப்படுகிறது. இந்த பாம்புகள் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், மற்ற நாட்களில் இவற்றை காணுவது மிகவும் அரிதாகும். கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாம்புகள் தொடர்பான எந்த தகவலும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கரோனா ஊரடங்கின் போது, மேற்கு இமயமலை பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகில் வீரேந்தர் பரத்வாஜ் ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய் பாம்பை முதன்முறையாக கண்டுபிடித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கங்களில் அந்த பாம்பின் புகைப்படங்களை பகிர்ந்த பிறகு, அது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஆங்கிகுலஸ் ராப்பி பாம்பின் தோற்றத்தை ஒத்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்த பிறகு, கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆய்வில் இந்த பாம்பின் மரபணு ஆசியா முழுவதும் உள்ள எந்த பாம்பு இனத்துடன் தொடர்பு இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில், இந்த புதிய வகை பாம்பு இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் என ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.பிரபலமான திரைப்படங்களில், ‘டைட்டானிக்’, ‘ஷட்டர் ஐலேண்ட்’, ‘இன்செப்ஷன்’ போன்றவற்றில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, தனது நடிப்புக்கு அப்பாற்பட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதற்கான பல ஆவணப்படங்களை அவர் தயாரித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு, இந்த புதிய பாம்பினத்துக்கு அவரது பெயரை வழங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

