உச்ச நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் 10ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் , வரும் நவம்பர் 11ம் தேதி தனது பதவியை ஏற்க உள்ளார். கடந்த வாரம், மத்திய சட்ட அமைச்சகம், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சந்திரசூட்டுக்கு கடிதம் அனுப்பியது. இதற்கான பரிந்துரையில், சந்திரசூட் கண்ணா பெயரை முன்வைத்தார். சஞ்சீவ் கண்ணா 1960ம் ஆண்டு மே 14ம் தேதி டில்லியில் பிறந்தவர். அவர் டில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, தனது தொழில்முறை வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இவரது தந்தை 1985ம் ஆண்டு வரை டில்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் சரோஜ் கண்ணா, டில்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராக இருந்தார். 1983ம் ஆண்டு, சஞ்சீவ் கண்ணா டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2004ம் ஆண்டு, அவர் டில்லி அரசின் வழக்கறிஞராக (சிவில்) நியமிக்கப்பட்டார். 2005ம் ஆண்டு, சஞ்சீவ் கண்ணா டில்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக, அவர் பல்வேறு ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.ஜனவரி 18, 2019 அன்று, உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் முன், அவர் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக உயர்ந்தார். தற்போது, அவர் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் அமைந்துள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆலோசகராகவும் பணயாற்றி வருகிறார். இவர் வரும் நவம்பர் 14 ம் தேதி 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.