டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.
ஃபரிதாபாத், சஜ்ஜார், ஆக்ரா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் வீடுகளில் இருந்தபோதிலும், பூமி அதிர்ந்தவுடன் மக்கள் வெளியே ஓடி வந்துள்ளார். முன்னதாக அக்டோபர் 3ம் தேதி தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் மேல் மேற்பரப்பு ஏழு டெக்டோனிக் தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
