ஹரியானா பள்ளிகளில் ‘காலை வணக்கம்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று கூற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுக்கு “குட் மார்னிங்” என கூறி வகுப்பை தொடங்குவர்.
இனி குட் மார்னிங் பதிலாக “ஜெய் ஹிந்த்” என்று கூற வேண்டும் என ஹரியானா அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.
வரும் சுதந்திர தினத்திலிருந்து, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் தினசரி ஜெய் ஹிந்த் என்று கூறுவதன் மூலம் தேசபக்தியை அதிகரிக்கும்.ஜெய் ஹிந்த்” என்று வாழ்த்து மாற்றத்தை அரசாங்கம் இப்போது ஊக்குவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 முதல் ஜெய் ஹிந்த் கூற மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான அனைத்து கல்வி அலுவலர்கள், மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களிடையே “தேசபக்தி மற்றும் தேசிய பெருமையின் வலுவான உணர்வை” வளர்ப்பதற்காக புதிய வாழ்த்தை மாநில அரசு தேர்வு செய்துள்ளது.
ஜெய் ஹிந்தின் வரலாறாக அரசு கூறுவது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராட ஆசாத் ஹிந்த் ஃபவுஜை உருவாக்கிய போது, “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தை உருவாக்கி மக்களிடையே பரப்பினார் அது விடுதலை உணர்வை தூண்டியது.
சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கான அவர்களின் நாட்டுப்பற்றை குறிக்கும் வகையில், நாட்டின் இராணுவப் படைகளால் “ஜெய் ஹிந்த்” என்ற வார்த்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இனிமேல் பள்ளிகளில் “காலை வணக்கம் ” என கேட்க இயலாது ஜெய் ஹிந்த்” என்றே ஒலிக்கும்.