ஒலிம்பிக் டென்னிஸ் தன் முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச்.

உலகம் சிறப்பு நிகழ்வுகள் விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், டென்னிஸ் ஆடவர் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் .

இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வயதான வீரர் (37 வயது) என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

24 கிராண்டு ஸ்லாம் பட்டங்களை பெற்றிருக்கும் ஜோகோவிச் ஒலிம்பிகில் தங்கம் பெற்றதால், கோல்டன் ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது வீரராக ஆகி இருக்கிறார்.

பாரிஸில் நடைபெற்ற இறுதி போட்டியில், ஜோகோவிச் அல்காரஸிடம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வென்றார்.

அண்மையில் நடந்த விம்பிள்டன் இறுதி போட்டியில், ஸ்பெயின் வீரரான அல்காரஸ் ஜோகோவிச்யை வென்றார்.இதனால், வெற்றி பெற வேண்டுமென உற்சாகத்துடன் ஜோகோவிச் இன்று போட்டியில் களமிறங்கினார்.

37 வயதான ஜோகோவிச், இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் 2008 ஆம் ஆண்டில் வெண்கலத்தை மட்டுமே வென்றுள்ளார். டென்னிஸ் வாழ்க்கையில், தங்கம் மட்டும் தான் அவரது வெல்லாதிருந்தர்.


அல்காரஸ் இளம் வயதினால், தனது ஆக்ரோஷமாகவும் வேகத்தையும் சேர்த்து, ஜோகோவிசுக்கு சவால் அளித்தார். இந்த போட்டி சுமார் 2:30 மணி நேரம் நடைபெற்றது, இதில் ஜோகோவிச் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதனால், ஸ்பெயினின் நா சேர்ந்த அல்காரஸுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த லோரென்சோ முசெட்டிக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *