
மகளிர் மல்யுத்தத்தில் ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை வினேஷ் போகட் பெற்றார்.
சாம்பியனான இந்திய மல்யுத்த வீராங்கனையின் எடை அதிகரிப்பு காரணமாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இப்போது ஏமாற்றமே மிஞ்சியது.
வரும் ஆகஸ்ட் 12 புதன்கிழமை, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 50 கிலோவுக்குட்பட்ட இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்ட்டை எதிர்த்து விளையாட இருந்தார்.
இந்தியாவுக்காக அவர் ஏற்கனவே வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். தற்போது அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, போகாட் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக பதக்கம் இல்லாமல் பாரிஸை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இன்று காலை எடை எடுக்கும் போது அவர் 100 கிராம் அதிகமாக காணப்பட்டார். “விதிமுறைகள் இதை அனுமதிக்கவில்லை, 50 கிலோ பிரிவில் போட்டியிட 100 கிராம் எடை அதிகமாக உள்ளதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்,” என்று வருத்தத்துடன் இந்திய அணி அறிவித்துள்ளது.
100 கிராம் எடையை குறைக்க வினேஷ் போகட் முடியை வெட்டுவது, உடைகளைக் குறைப்பது என அனைத்தையும் முயற்சித்ததாக கூறுகிறார்.இது வினேஷின் தவறல்ல. அவர் அற்புதமாக தற்பொது வரை விளையாடி வருகிறார்.
“பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அனைவரும் முழு ஆதரவை வினேஷ்க்கு தர வேண்டும் என்று சஞ்சய் சிங் கூறினார்.

மல்யுத்த வீரர்கள் தங்கள் எடை அறிக்கையை முதல் சுற்றிலும் இறுதிப் போட்டியின் காலையிலும் காட்ட வேண்டும் என்று மல்யுத்த விதிகள் கூறுகின்றன.
இறுதிப் போட்டி நடைபெறும் நாள் காலைக்குள் 50 கிலோவுக்குக் கீழ் இல்லை என்றால், வினேஷ் போகாட் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
மேலும் வினேஷிடம் அரையிறுதியில் தோல்வியடைந்த கியூபா நாட்டு மல்யுத்த வீரர் குஸ்மான் லோபஸ் யூஸ்னெலிஸ் இப்போது இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஹில்டெப்ராண்டுடன் மோதுவார் என கூறப்படுகிறது.


