கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. மேலும், இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை முக்கிய காரணமாக இருந்தது. சீனாவின் குவாங்சோவுக்கு வரும் 26-ந்தேதி முதல் விமான சேவைகளை தினந்தோறும் வழங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

