இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் இந்தியா உலகம் கோவிட் 19 செய்திகள் தமிழ்நாடு மருத்துவம் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகை வைரஸ் எல்எப்.7 மற்றும் என்பி.1.8 ஆகியவை கொரோனா தொற்றின் திடீர் அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது. எனினும், ஜேஎன்.1 வகை வைரஸ் தான் தற்போது இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி தொற்றாக பரவி வருகிறது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *