500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் ஒரு வாரத்தில் இது குறித்த முழு அறிவிப்பும் வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 மதுக் கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார்.இந்த நிலையில், 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டியில், “500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் பாதுகாப்புகாக டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.

