தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் அரைசதம் விளாசிய தமிழக வீரர் சாய் சுதர்சன்; அபார வெற்றிப் பெற்ற இந்திய அணி

ஆப்ரிக்க நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் சாய் சுதர்ஷன் அரை சதம் அடித்துள்ளார்.
இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் முடிந்தது, அதை சமன் செய்தது இந்தியா. இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடர் இன்று (டிச.17) வாண்டரர்ஸ் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெற்று உள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தது.
இந்நிலையில், இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப், ஆவேஷ் கான் பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளை இழந்தது. 27.3 ஓவர் முடிவில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் 5 ரன்களில் ஆட்டமிழக்க சாய் சுதர்ஷன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டார்கள்.
16.4 ஓவரில் இந்திய அணி (117) இலக்கினை எட்டியது. அறிமுகப் போட்டியிலேயே தனது அரைசதத்தினை அடித்து அசத்தினார் தமிழக வீரர் சாய் சுதர்ஷன். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 55* ரன்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயரும் அரைசதமடித்து (52) ஆட்டமிழந்தார். திலக் வர்மா 1 ரன்களுடன் இருந்தார்.
ஆட்டநாயகன் விருது அர்ஷ்தீப் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *