கீழக்கரை புதிய அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு; முதல் பரிசை தட்டிச்சென்ற மாடுபிடி வீரர் அபிசித்தர்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடித்து பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட நிலையில், கீழக்கரையில் சாதித்து மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் தட்டிச் சென்றார்.
மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார். அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் இன்று (ஜன. 24) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. கீழக்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மாலை நிறைவடைந்த நிலையில், அபிசித்தர் என்ற இளைஞர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
அவருக்கு ரூ.1 லட்சம் பணத்துடன், மஹிந்திரா தார் ஜீப்பை பரிசாக வழங்கப்பட்டது. வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்தப் பரிசினை வழங்கினார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட அபிசித்தர் இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்தார். கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் தலா 6 காளைகளை அடக்கிய தமிழரசன், பரத் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *