ரம்ஜான் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தகவல்

அரபு நாடுகள் ஆப்கானிஸ்தான் ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா உலகம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.
மேலும் ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரம்ஜான் மாதம் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் மாதம் தொடங்கியது. இந்நிலையில், இன்று(ஏப்ரல் 9) பிறை தென்படாததால் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 11 ஆம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *