திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% அளவில் வசூலிக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூபாய் 250, A/C திரையரங்குகளுக்கு ரூபாய் 200 மற்றும் NON A/C திரையரங்குகளுக்கு ரூபாய் 150 என கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என்றும் . நமது அண்டை மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கில் வெளியான குறுகிய காலத்தில் ஓ.டி.டியில் படங்கள் வெளியாகின்றன மற்றும் சில மாநிலங்களில் திரைப்படம் சிறப்பு காட்சிகள் என முன்னதாகவே தொடங்குவதால், தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. எனவே, பெரிய நடிகர்களின் படங்கள் 8 வாரங்கள் கழித்து, அதற்கடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படங்கள் 6 வாரங்கள் கழித்து ஓ.டி.டியில் திரையிடப்பட வேண்டும் என புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டுகிறோம். மற்றும் தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் திரையிடப்பட வேண்டும், ஏனெனில் சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

