மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

ஆரோக்கியம் இந்தியா சித்தர்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மருத்துவம் முதன்மை செய்தி வீட்டு வைத்தியம்

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தனிப்பட்ட முறையில் 40 சென்ட் பரப்பளவுள்ள ஒரு மூலிகை தோட்டத்தை உருவாக்கி, 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகளை வளர்த்து வருகிறார். அங்கு உள்ள ஒவ்வொரு மூலிகை செடியின் பெயர்களையும் துல்லியமாக ஆவணப்படுத்தியுள்ளார், மேலும் கரோனா காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை மருந்துகளை வழங்கி குணப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சுபஸ்ரீ கூறியதாவது வரிச்சூர் அருகிலுள்ள நாட்டார் மங்கலத்தில் 2021-ல் சுமார் 40 சென்டு அளவிலான சொந்த நிலத்தில் நான் மூலிகை தோட்டம் அமைத்தேன். எனது கணவர் பாபு வருங்கால வைப்பு நிதி துறையில் பணியாற்றியவர். அவர் விருப்ப ஓய்வுக்கு பிறகு, முழு நேரமாக தோட்டத்தின் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளார். நான் பள்ளி முடித்த பிறகு, விடுமுறை நாட்களில் தோட்டத்தை கவனிக்கிறேன். பாசனத்திற்காக தனி போர்வெல் அமைத்து, செடிகளை பாதுகாக்க இரும்பு வேலியுடன், பார்வையாளர்களுக்கான வசதியான சிறிய குடிசை உள்ளிட்ட 40 சென்டு நிலத்தை மூலிகைச் சரணாலயமாக மாற்றியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.தற்போது, தனது மூலிகை தோட்டம் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்ட ஆர்வலர்களுக்கான ஒரு முக்கிய ஆதார மையமாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் ஆராய்ச்சிக்காக வருகை தருகிறார்கள். ஒவ்வொரு மூலிகையின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்குகிறேன். மருத்துவ தாவரங்களின் மதிப்பு மற்றும் அவற்றின் பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு கற்பிக்க பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்படுகின்றன” என சுபஸ்ரீ கூறினார். தற்போது, தனது மூலிகை தோட்டம் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்ட ஆர்வலர்களுக்கான ஒரு முக்கிய ஆதார மையமாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் ஆராய்ச்சிக்காக வருகை தருகிறார்கள். ஒவ்வொரு மூலிகையின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்குகிறேன். மருத்துவ தாவரங்களின் மதிப்பு மற்றும் அவற்றின் பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு கற்பிக்க பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்படுகின்றன” என சுபஸ்ரீ கூறினார். இந்நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார்.சுபஶ்ரீ அவர்களும் பிரதமர்க்கு தனது நன்றியை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *