நாசா, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட், ஜீனெட் எப்ஸ் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகியோர் உள்ளனர். இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.இந்த 4 விண்வெளி வீரர்கள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், விண்வெளி வீரர்கள் இல்லாமல் அந்த விண்கலம் கடந்த செப்டம்பரில் பூமி வந்தது. மேலும், மில்டன் புயலால் மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களிலிருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது. மார்ச் மாதத்தில் விண்வெளிக்குச் சென்ற 4 விண்வெளி வீரர்கள் தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். மெக்சிகோ வளைகுடாவில் உள்ள புளோரிடா கடற்கரை அருகே, இன்று அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்தது. அதன் பிறகு, விண்வெளி வீரர்கள் படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

